×

கீழடி அருகே மணலூரில் கண்டறியப்பட்ட உலைகலனில் மண்பாண்ட பொருட்கள் கண்டெடுப்பு

திருப்புவனம்: கீழடி அருகே மணலூர் அகழாய்வில் கண்டறியப்பட்ட உலைகலனில் இருந்து, மண்பாண்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. 6ம் கட்ட அகழாய்வில் கீழடி தவிர்த்து மணலூர், அகரம், கொந்தகை உள்ளிட்ட நான்கு இடங்களிலும் ஆய்வு நடந்து வருகிறது. ஒவ்வொரு இடங்களிலும் 3 முதல் 5 குழிகள் வரை தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடக்கின்றன. ரூ.40 லட்சம் செலவில் நடந்து வரும் 6ம் கட்ட அகழாய்வு பணிகளில், இதுவரை முதுமக்கள் தாழிகள், எலும்புகள், கருப்பு சிவப்பு வண்ண பானைகள், பானை ஓடுகள், விலங்கு எலும்புகள், செங்கற்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன. மணலூரில் 3 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடந்தன.

இதில் ஒரு குழியில் உலைகலன் கண்டறியப்பட்டது. பண்டைய காலத்தில் அணிகலன்கள் செய்ய இந்த உலைகலன் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. உலைகலனின் முழு அளவும் வெளியில் வந்தால் மட்டுமே இதனுடைய பயன்பாடு தெரிய வரும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர். தற்போது இந்த உலைகலனுக்குள்,  சிறு சிறு மண்பாத்திரங்கள் கண்டறியப்பட்டுள்ளது. தொட்டி போன்ற அமைப்பை கொண்ட இந்த பாத்திரங்கள் உலைகலன் பயன்பாட்டில் இருந்திருக்கக்கூடும் என ஆய்வாளர்கள்  கருதுகின்றனர்.இதுவரை 5 அடி ஆழம் மட்டுமே தோண்டியுள்ள நிலையில், மேலும் ஆழமாக தோண்டும்போது உலைகலனின் முழு அமைப்பு வெளியில் வரும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Ulailayan ,Manaliur , Detection,pottery materials , Ulailayan found, Manaliur
× RELATED தொழில்நகரமாக இருக்க வாய்ப்பு கீழடி அருகே மணலூரில் உலைகலன் கண்டுபிடிப்பு